நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் பெருமான், பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல் பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், பரமத்திவேலூரில் தேரடி வீதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான பாணலிங்க சிவ விஷ்ணு ஆலயத்தில் உள்ள வல்லப விநாயகர்,
பாண்டமங்கலம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர் ,வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, மணியனூர், கந்தம்பாளையம், பரமத்தி, கபிலர்மலை மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.