கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. 
ஆன்மிகம்

பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

புது மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏப்ரல் 28-ஆம் தேதி மாலையில் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம், அதேபோல் இந்த வருடமும் கம்பம் நடப்பட்டு பூச்சாட்டு விழாவுடன் திருவிழா தொடங்கியது.

26-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இன்று 24-ஆம் தேதி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

27ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மாலை ஆண் பக்தர்கள் தீ மிதித்தல் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி (நெருப்பு) போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலையில் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மாலையில் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறும். இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி காலை கம்பம் காவேரி ஆற்றுக்கு செல்லுதலும், மே மாதம் 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.