ஆன்மிகம்

திருப்பதி கோதண்டராமர் பேட்டை உற்சவம் கோலாகலம்

கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

திருப்பதி கோதண்டராமர் பேட்டை உற்சவம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோதண்டராமர், சீதா, லட்சுமணர் ஆகிய உற்சவர்கள் திருப்பதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூப்புசந்திரபேட்டை கிராமத்துக்கு புறப்பட்டனர்.

இன்று காலையில் கோவிலில் இருந்து மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்ட உற்சவர்கள் கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தைச் சென்றடைந்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு மாலை 4 மணியளவில் ஊஞ்சல் சேவை தொடங்கியது. மாலை 5 மணி வரை உஞ்சல் சேவை நடைபெறுகிறது.

அதன்பின்னர் கூப்புசந்திரபேட்டை கிராமத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு இரவில் கோவிலை அடைகின்றனர்.

SCROLL FOR NEXT