சிறப்பு வழிபாடு 
ஆன்மிகம்

புரட்டாசி 4-வது சனிக்கிழமை... காலடிப்பேட்டை பெருமாள் கோவிலில் 400 கிலோ உலர் பழங்களால் அலங்காரம்

ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பாதாம், செர்ரி பழங்களால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பழ ஜடை அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

புரட்டாசி மாதம் 4-வது சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை தரிசித்தனர்.

400 கிலோ உலர் பழங்கள்

மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு சுமார் 400 கிலோ எடையிலான உலர் பழங்களை கொண்டு பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் பவள வண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு வெண்பட்டு உடுத்தப்பட்டு, பாதாம், முந்திரி, லவங்கம், செர்ரி, கிவி உள்ளிட்ட பழங்களால் தொடுக்கப்பட்ட வண்ணமயமான மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

ஜடை அலங்காரம்

ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பாதாம், செர்ரி பழங்களால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பழ ஜடை அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், ராமானுஜர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் உலர் பழ மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. கோவில் மண்டபம் முழுவதும் முத்துமணி தோரணங்கள் அலங்கரித்தன. உலர் பழ அலங்காரத்தில் ஜொலித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT