குடந்தை,
காவிரி தென்கரைத்திருத்தலங்களுள் மூவரால் தேவார பாடல் பெற்றதும். மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் சிறப்பு பெற்றதும், சூரியன், சந்திரன், பிரம்மா. கார்க்கோடகன் ஆகியோர் வழிபட்ட சிறப் புடையது இத்திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மட்டுமே நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் இராகு பகவான். நாக வல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலபிஷேகம் செய்யும்போது அந்தப்பாலானது நீல நிறமாக மாறும். இராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இராசியிலிருந்து, மற்றொரு இராசிக்குப் பின்னோக்கி நகர்வார். இது இராகு பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது.
நிகழும் மங்களகரமான பராபவ ஆண்டு ஐப்பசி திங்கள் 27ம் நாள் (13-ந் தேதி இராகுபகவான் கும்ப இராசி யிலிருந்து மகர இராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். இதனை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள். அபிஷேக ஆராதனை. இலட்சார்ச்சனை, சந்தனகாப்புஅலங்கா ரம், தயிர் பள்ளயம், அன்ன தானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் வெகு சிறப் பாக நடைபெற உள்ளன.
10ந் தேதி மற்றும் 16ந் தேதி தேதிகளில் ராகு பெயர்ச்சி லட்சார்ச்சனை நடை பெறுவுள்ளன. இறையன்பர்கள் இராகு பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு இராகுபகவான் அருள் பெற வேண்டுகிறோம் என்று ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.