பூக்குழி இறங்கிய பக்தர்கள் 
ஆன்மிகம்

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

பூக்குழி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் பூக்குழி திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.