ராம நவமி சிறப்பு அபிஷேகம் 
ஆன்மிகம்

ராம நவமி விழா.. திருப்பதி திருமலையில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம்

ரங்கநாயக்க மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

நாடு முழுவதும் இன்று ராம நவமி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.

ராமநவமி விழாவின் ஒரு பகுதியாக, திருப்பதி திருமலையில் சீதா தேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீ ராமச்சந்திர ஸ்வாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருமலையில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழாவில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒண்டிமிட்டா கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

இதேபோல் ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோவிலில் ராம நவமி பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கோவில் துணை செயல் அலுவலர்கள் பிரசாந்தி மற்றும் சிவபிரசாத் மற்றும் பிற அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.