ஆன்மிகம்

கள்ளழகர் கோவிலில் ரூ.46.43 லட்சம் உண்டியல் காணிக்கை

கள்ளழகர் கோவில், தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.46 லட்சத்து 43 ஆயிரத்து 452 ரொக்கப்பணம் கிடைத்தது.

கள்ளழகர் கோவில்

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில், தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், திருவிழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், குடும்ப நலன் மற்றும் செழிப்புக்காகவும் சாமி தரிசனம் செய்து உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர்.

உண்டியல் காணிக்கை

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள், திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.46 லட்சத்து 43 ஆயிரத்து 452 ரொக்கப்பணம், 78 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு டாலர் நோட்டுகள் கிடைத்தன.

உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் இணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் பிரதிபா, ஆய்வாளர் கார்த்திகா, பிரதிநிதி ஆவுடையம்மாள், கண்காணிப்பாளர்கள் பாலலட்சுமி, ரம்யா சுபாஷினி, அருணாதேவி, மக்கள் தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT