ஆன்மிகம்

பங்குனி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை கோவில் நடை திறப்பு

மாதாந்திர பூஜைகளுக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவி​லில் ஒவ்​வொரு மலை​யாள மாதத்​தின் தொடக்​கத்​தி​லும் 5 நாட்​கள் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இதன்​படி மீனம் மாத (பங்​குனி) பூஜைக்​காக நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்​கப்பட உள்​ளது. தந்​திரி கண்​டரரு மகேஷ் மோக​னரு தலை​மை​யில் மேல்​ சாந்தி பிர​சாத் நம்​பூ​திரி நடையை திறப்​பார். அன்று சிறப்பு பூஜைகள் எது​வும் நடை​பெறாது.

நாளை மறு​நாள் (மார்ச் 15-ம் தேதி) அதி​காலை முதல் 19-ம் தேதி வரை கணபதி ஹோமம், நிர்​மால்ய பூஜை, படிபூஜை உள்​ளிட்ட பல்​வேறு வழி​பாடு​கள் நடை​பெறும். பூஜைகள் நிறைவடைந்து மார்ச் 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவுக்காக மார்ச் 22ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

ஆன்​லைன் முன்​ப​திவு மூலமே பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​படு​வர். எனவே பக்​தர்​கள் தங்​களுக்​கான தரிசன தேதியை முன்​ப​திவு செய்து சபரிமலைக்கு வர வேண்​டும் என்று தேவசம்போர்டு தெரிவித்​துள்​ளது.