ஆன்மிகம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்

‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார்.

திருவனந்தபுரம்,

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.

அய்யப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்

மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது. அதேபோல், தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியிலும் ’வீ த லீடர்ஸ்’ இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை நேற்று கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு சபரிமலைக்கு சென்ற அண்ணாமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.