கன்னியாகுமரி,
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப தியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா வருகிற ஜூன் 1-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறு கிறது.
இதையொட்டி நாளை வெள்ளிகிழமை அதிகாலை 05.30 மணி அளவில் கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றது. நிகழ்ச்சிக்கு குரு பையன் காமராஜ் தலைமை தாங்குகிறார். குருமார்கள் பால் பையன், பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். குரு பையன் ராஜா கொடியேற்றி வைக்கிறார்.
பின்னர், பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. மாலையில் பணிவிடையும் இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து 23-ந் தேதி மாலையில் அய்யா மயில் வாகனத்தில் எழுந்த ருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 24-ந் தேதி இரவு அய்யா அன்னவா கனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், 25-ந் தேதி மாலையில் அய்யா பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் 26-ந் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் எழுந்தரு ளும் நிகழ்ச்சியும் 27-ந் தேதி அய்யா சர்ப்ப வாகனத்திலும் 28-ந் தேதி அய்யா கருட வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
8-ம் நாள் விழாவான 29-ந் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு முத்திரி கிணறு சமீபம் கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சாமிதோப்பு வந்தடைகிறார்.
30-ந் தேதி அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் அய்யா இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
திருவிழாவின் 11-ம் நாளான ஜூன் 1-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தலைமைபதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.