ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி: கும்பத்தில் இருந்து மீனத்திற்கு இடம்பெயர்ந்தார் சனீஸ்வரன்

சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது

புதுச்சேரி,

ஜோதிடத்தில் சனிபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறும் நிகழ்வே சனிப்பெயர்ச்சி ஆகும். சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியிலும் 2.5 ஆண்டுகள் தங்குகிறார். அந்த வகையில் சனீஸ்வரன் கடந்த 2.5 ஆண்டுகளாக கும்பர ராசியில் நிலைகொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2.5 ஆண்டுகளாக கும்ப ராசியில் நிலைகொண்டிருந்த சனிபகவான் இன்று மீனராசிக்கு இடம்பெயர்ந்தார். இன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார்.

இதனிடையே, புதுச்சேரியின் காரைக்காலில் அமைந்திருக்கும் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் தனிசன்னதியில் ஸ்ரீசனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

சனிப்பெயர்ச்சியையொட்டி தமிழ்நாட்டிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.