கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

சங்கரன்கோவில்: சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலை எழில் நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது.

நேற்று காலை 6 மணி முதல் மங்கல இசையுடன் சிறப்பு ஹோமங்களும், அதனைத் தொடர்ந்து திருமறை பாராயணமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து காலை 7.48 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT