முத்தங்கி அலங்காரத்தில் தர்மபுரி சாலை விநாயகர் 
ஆன்மிகம்

சங்கடஹர சதுர்த்தி... தர்மபுரியில் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த சாலை விநாயகர்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தர்மபுரி பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மபுரி,

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் முத்தங்கி அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில், இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலை விநாயகர் கோவிலில் அதிகாலை முதல் விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் விநாயகருக்கு முத்தங்கி அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிவசக்தி விநாயகர்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தர்மபுரி ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி கடைவீதி தேர் நிலையம் அருகில் உள்ள ஏழூர் பிள்ளையார் கோவில், அப்பாவு நகர் கற்பக விநாயகர் கோவில், குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ செல்வ கணபதி கோவில், அன்னசாகரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதி மற்றும் தர்மபுரி நகரம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேட்டுப்பாளையம் செல்வ விநாயகர்

திருப்பூர் வெள்ளகோவில்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நடைபெற்றன. முத்தூர் சாலை மேட்டுப்பாளையத்தில உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர்க்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள், சந்தனம், குங்குமம், மலர்கள், கனிகள், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதே போல காமராஜபுரம் விநாயகர் கோவில், வட்ட மலையார் தோட்டம் விநாயகர் கோவில், தீரன் சின்னமலை நகர் கணபதி கோவில், அம்மன் கோவில் வீதி விநாயகர் கோவில், குமாரவலசு விநாயகர் கோவில், காந்திநகர் முத்தூர் சாலை கல்லுக்கோட்டை மேடு விஜய விநாயகர் கோவில், மங்கலப்பட்டி விநாயகர் கோவில், மயில் ரங்க விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் சதுர்த்தி வழிபாடுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.