கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

செம்பனார்கோவில்: மடப்புரம் சிதம்பர விநாயகர் கோவில் குடமுழுக்கு

விழாவில் தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை,

செம்பனார் கோவில் அருகே மடப்புரத்தில் சிதம்பர விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மடப்புரத்தில் சிதம்பர விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு

இன்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின். காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT