திருவிளக்கு வழிபாடு 
ஆன்மிகம்

செங்கோட்டை: உலக நன்மை வேண்டி திருவிளக்கு வழிபாடு

செங்கோட்டையில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

செங்கோட்டை,

செங்கோட்டை அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவிலில் சுவாமி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் மாபெரும் திருவிளக்கு வழிபாடு மற்றும் மாதர் நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர அகில பாரத துணைத்தலைவா் அனுமந்தராவ் தலைமை தாங்கினார். விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன், தொழிலதிபர் மோகன்படேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருவிளக்கு வழிபாட்டில் செங்கோட்டை மற்றும் அதனை சுற்றி வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும், சிறுமிகளும் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.