தீமிதித்த பக்தர் 
ஆன்மிகம்

சோழவந்தான் திரெளபதி அம்மன் கோவில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்

விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சோழவந்தான்,

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் 10ம் நாள் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி (தீமிதித்தல்) நடைபெற்றது.

இதையொட்டி காலையில் வைகை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து பூக்குழி பொட்டல் வந்தனர். அதேசமயம், கோவிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு மார்க்கெட் ரோடு, கோவிந்தம்மாள் தெரு வழியாக பூக்குழி மண்டகப்படிக்கு வந்து சேர்ந்தான்.

இதைத் தொடர்ந்து மாலையில் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வைத் தொடர்ந்து இரவில் அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.