திருவிளக்கு பூஜை 
ஆன்மிகம்

சோழவந்தான்: மேலக்கால் விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் வடக்கு தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு விநாயகர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மூன்று நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் முதல் நாளான நேற்று இரவு கோவில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு விழாக் குழு சார்பில் எண்ணெய், திரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன

விளக்கு பூஜையைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதல் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT