ஆன்மிகம்

சிங்கபெருமாள் கோவில்: பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் சேஷ வாகனத்தில் வீதி உலா

பிரம்மோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான இன்று, உற்சவ மூர்த்தியான நரசிம்ம பெருமாள் சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து ஏகாந்த சேவையும், மதியம் விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT