திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் 
ஆன்மிகம்

திருச்சானூர் பகுதி கோவில்களில் அக்டோபர் மாதம் நடைபெறும் சிறப்பு உற்சவங்கள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.

திருப்பதி,

அக்டோபர் மாதத்தில் திருச்சானூர் மற்றும் அப்பலாயகுண்டாவில் உள்ள கோவில்களில் பல்வேறு சிறப்புத் விழாக்களும் ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருச்சானூர்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அக்டோபர் 2, 9, 23, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது. அதில், உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்டோபர் 11 முதல் 20-ந்தேதி வரை நவராத்திரி உற்சவம் நடக்கிறது.

பலராம கிருஷ்ணர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை). 29-ந்தேதிகளில் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை திருச்சி உற்சவம் நடக்கிறது.

சுந்தரராஜசாமி கோவிலில் 24-ந்தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு திருச்சி வாகனத்தில் உற்சவர் சுந்தரராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சூரியநாராயணசுவாமி கோவிலில் 10-ந்தேதி ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திருச்சி வாகனத்தில் உற்சவர் சூரியநாராயண மூர்த்தி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருச்சானூர் சீனிவாச சுவாமி கோவிலில் அக்டோபர் 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் மூலவர் சீனிவாசருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அப்பலாயகுண்டா

திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் அக்டோபர் 2, 9, 16, 23, 30-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு வஸ்திர அலங்கார சேவை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. 6-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டதள பாத பத்மாராதனை சேவை நடைபெறுகிறது.

5-ந்தேதி முறைப்படி பவித்ரோற்சவ அங்குரார்ப்பணம், 6 முதல் 8-ந்தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்கிறது. 14-ந்தேதி காலை 8 மணிக்கு அஷ்டோத்ர சத கலசாபிஷேகம், 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு கல்யாணோற்சவம், 4, 11, 18, 25-ந்தேதிகளில் பிரசன்ன ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT