சிறப்பு திருப்பலி 
ஆன்மிகம்

பாளையங்கோட்டை புனித அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

நேற்று மாலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து அசன விருந்து வழங்கப்பட்டது.

நெல்லை,

பாளையங்கோட்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

திருவிழா

பாளையங்கோட்டை சேவியர் காலனி புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் 25-வது ஆண்டு ஆலய அர்ச்சிப்பு விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புனிதரின் மன்றாட்டு மாலை, நவநாள் திருப்பலி நடந்தது.

16-ந்தேதி மாலையில் புனித அந்தோணியார் சப்பர பவனியும், அசனமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் நற்கருணை பவனி, திருப்பலி நடந்தது.

சிறப்பு திருப்பலி

நேற்று மாலை 6.30 மணிக்கு முன்னாள் மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் புனித அந்தோணியாரின் தாழ்ச்சியும், வாழ்வும் என்ற சிந்தனையில் இறை செய்தி வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அசன விருந்தும் வழங்கப்பட்டது.

விழாவில் பங்குத்தந்தை சைமன் செல்வன், டவுன் பங்குத்தந்தை சீவா, சேவியர் கல்லூரி முதல்வர் ரூபஸ், துணை முதல்வர் அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.