பூண்டி மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அருட்தந்தை லூர்துசேவியர் கல்லறை புனிதம் செய்யப்பட்ட காட்சி  
ஆன்மிகம்

பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி

கல்லறை திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பலர் கலந்துகொண்டனர்.

பூதலூர்,

பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, அருட்தந்தையர்கள் லூர்து சேவியர், ராயப்பர் கல்லறைகள் புனிதம் செய்யபபட்டன.

கிறிஸ்தவ வாழ்வில் நவம்பர் 2ஆம் நாள் கல்லறைத் திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இறந்துபோன குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து இறைநம்பிக்கையாளர்களையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் சிறப்பாக இறைவேண்டல் செய்யும் புனித நாளாகும்.

இத்திருநாளில் கிறிஸ்தவர்கள் தங்களின் மூதாதையர்களின் கல்லறைகளில் மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபாடு நடத்துவார்கள். அவ்வகையில் இந்த அண்டு இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.

சிறப்பு திருப்பலி

கல்லறைத் திருநாளை முன்னிட்டு இன்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பலி நிறைவு பெற்றதும் கோவில் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இறையடியாராக உயர்த்தப்பட்டிருக்கும் அருட்தந்தை லூர்து சேவியர் கல்லறை புனிதம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராலய சிறுவர் பூங்கா பகுதியில அமைந்திருக்கும் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றி மறைந்த ராயப்பர் கல்லறை புனிதம் செய்யப்பட்டது. இன்று மாலை பங்கின் கிளை கிராமங்களில் உள்ள கல்லறைகள் புனிதம் செய்யப்படும்.

கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்களின் கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைத்து உருக்கமாக பிரார்த்தனை மேற்கொண்டனர்.

SCROLL FOR NEXT