மழை வேண்டி தொழுகை 
ஆன்மிகம்

மழை வேண்டி வல்லம் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சை,

தஞ்சை அருகே உள்ள வல்லம் ஜூம்மா பள்ளிவாசலில், மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

வறட்சியால் மக்கள் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கடும் வெப்பம் வாட்டி வருகிறது.‌ பல இடங்களில் குளங்கள், கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. கால்நடைகளும் தண்ணீர் தேடி பல இடங்களில் அலைந்து திரிகின்றன. விவசாயத்திற்கும் மக்களின் அத்தியாவசிய தேவைக்காகவும் பருவ மழை முக்கிய தேவையாக உள்ளது. ஆனால், இந்த ஆண்டு சரியான மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது.

இந்நிலையில் மழை வேண்டி தஞ்சையை அடுத்துள்ள வல்லம் ஜும்மா பள்ளிவாசலில் இன்று (30.9.2026) காலை 7 மணி அளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. வல்லம் ஜூம்மா பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது ரபீக்பாகவி தொழுகை நடத்தி பிரசங்கம் செய்தார். முகம்மது பாரூக் ஹாஜியார் பிராத்தனை செய்தார்.

சிறப்பு தொழுகையில் பிள்ளையார்பட்டி அல்குவைத் பள்ளிவாசல் அஷ்ரஃபுல் உலூம் ஹிஃப்ளூ மதரஸாவின் ஆசிரியர்கள் திருப்பூர் இமாம் ஹாபிழ் முகம்மது யாஸின், ஒரத்தநாடு ஹாபிழ் அப்துர்காதிர், வல்லம் மேலப்பள்ளிவாசல் இமாம் முகமது ஹினிப், வல்லம் அண்ணாநகர் பள்ளிவாசல் இமாம் முகமது சித்திக், வல்லம் ஜமாத் நிர்வாகிகள், அஷ்ரஃபுல் உலூம் மதரஸாவில் திருக்குர்ஆனை மனனம் செய்து வரும் ஹாஃபிழ் மாணவர்கள், வல்லம் ஜமாத்தார்கள் மற்றும் வல்லத்தை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT