சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் முத்தனூர் தருண கணபதி ஆலயத்தில் ஐப்பசி மாத சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் சேமங்கி, மறவாபாளையம், நொய்யல், குறுக்கு சாலை அண்ணா நகர், அத்திப்பாளையம், குப்பம், உப்பு பாளையம், புன்னம்சத்திரம், புன்னம் , மூலிமங்கலம், காகிதபுரம், வேலாயுதம்பாளையம் புகழிமலை அடிவாரம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர், தவுட்டுப்பாளையம், பாலத்துறை மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகப் பெருமானுக்கு ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
அதேபோல் பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பொத்தனூர் வெங்கமேட்டில் உள்ள வல்லப கணபதி, பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பாண்டமங்கலம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, கபிலர்மலை, மணியனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் விநாயகருக்குக்கு தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலை புற்றுநோய் தீர்த்த அருள்மிகு ஶ்ரீ பொன்னிவிநாயகர் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து யாக பூஜை, கோ பூஜை செய்யப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்றது.பே ராவூரணி, பொன்காடு மற்றும் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.