யாகத்தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் 
ஆன்மிகம்

விவசாயம் செழிக்க வேண்டி.. ஆலஞ்சேரி அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு யாகம்

யாகத்தின் நிறைவில் புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் அகஸ்திய மகரிஷி பூஜை செய்து வழிபட்ட பழமையான தலமான அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. வெயிலின் தாக்கம் குறையவும் வேண்டியும், உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த யாகத்தை நடத்தினர்.

30 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. யாகத்தின் நிறைவில் புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அகஸ்தீஸ்வரருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளர் சக்தி, சீர்காழி நகர அதிமுக செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர் மற்றும் அதிமுக பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT