சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை வழிபட்ட பக்தர்கள் 
ஆன்மிகம்

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய தாயார்

பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்கின்றனர்.

தமிழகத்தின் சென்னையில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 7-ம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழா, வருகிற 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது தினமும் காலை 9.00 மணி மற்றும் இரவு 7.00 மணிக்கு பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று காலை பத்மாவதி தாயார் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவில் சிம்ம வாகனத்திலும், இன்று காலையில் கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளினார்.

தேவஸ்தான உதவி நிர்வாக அதிகாரி தனஞ்சயா, கண்காணிப்பாளர் புஷ்பலதா, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

வாகன சேவை விவரம்

பிப்ரவரி 10: இரவு - ஹனுமந்த வாகனம்

பிப்ரவரி 11: காலை - பல்லக்கு உற்சவம், இரவு - கஜ வாகனம்

பிப்ரவரி 12: காலை - சர்வபூபால வாகனம், இரவு - கருட வாகனம்

பிப்ரவரி 13: காலை - சூர்ய பிரபை வாகனம், இரவு - சந்திர பிரபை வாகனம்

பிப்ரவரி 14: காலை 8.30 மணிக்கு - ரத உற்சவம், இரவு - அஸ்வ வாகனம்

பிப்ரவரி 15: காலை 11.00 மணிக்கு - சக்கர ஸ்நானம், இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கம்

பிப்ரவரி 16: மாலை 6.00 மணிக்கு - புஷ்பயாகம்