ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருவாடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் இந்த உற்சவத்தில், தினமும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவ்வகையில் ஆடிப்பூரம் உற்சவத்தின், 10ம் நாள் ஆடிப்பூரம் நன்னாளான இன்று (14.08.2026) ஆண்டாள் நாச்சியார், கல்யாண திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்றைய உற்சவ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதி ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியிலும் ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.