ஸ்ரீரங்கம்,
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி தினமும் வாகன சேவை, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாளில் (14.5.2026) தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் நிறைவு நாளான நேற்று (16.5.2026) இரவு ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளி, சித்திரை வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் வாகன மண்டபத்தை அடைந்த நம்பெருமாள், அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.