சுப்பிரமணிய சுவாமி ஹோமம் 
ஆன்மிகம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம்

ஒவ்வொரு நாள் ஹோமத்திலும் அல்லது திருக்கல்யாண உற்சவத்திலும் பங்கேற்க ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

கபிலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நடைபெற்றது.

ஹோம மகோற்சவம்

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு மாத சிறப்புப் பூஜைகள், ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த ஹோம மகோற்சவம் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை நடக்கிறது.

முதல் நாளில் கணபதி பூஜை, புண்ணியாகவாசனம், வாஸ்து பூஜை, பர்யானிக்கரணம், மிருத்சங்கரணம் மற்றும் முளைப்பாரி சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் கலச ஸ்தாபனம், அக்னி பிரதிஷ்டை, லகு பூர்ணாஹுதி நடந்தன.

இரண்டாம் நாள் காலையில் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பல்வேறு சடங்குகளுடன், கணபதி ஹோமம் மற்றும் லகு பூர்ணாஹுதி நடைபெற்றன.

சுப்பிரமணிய சுவாமி ஹோமம்

மூன்றாம் நாளான நேற்று சுப்பிரமணிய சுவாமி ஹோமம் தொடங்கியது. காலையில் சிறப்புப் பூஜைகள், ஹோமம் மற்றும் பிற சடங்குகள் நடத்தப்பட்டன. இன்றும் சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் நாகரத்னா, உதவி செயல் அலுவலர் குமாரிதேவி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் ஒவ்வொரு நாள் ஹோமத்திலும் அல்லது திருக்கல்யாண உற்சவத்திலும் பங்கேற்க தலா ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டில் இருவர் பங்கேற்கலாம். ஹோமத்தில் பங்கேற்பவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து வருவது கட்டாயமாகும்.

இந்த ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT