ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

ஞாயிறு வார விடுமுறை தினமான இன்று பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

திண்டுக்கல்,

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

அந்த வகையில், ஞாயிறு வார விடுமுறை தினமான இன்று பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பழனி மலையடிவாரத்தில் உள்ள கிரி வீதி மற்றும் சன்னதி வீதிகள் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நெரிசலை தவிர்க்கும் வகையில் மலைக்கோவிலுக்கு செல்ல தற்காலிகமாக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.