விருதுநகர்,
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 7 நாட்களும் ஆண்டாள் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் உற்சவம் தொடங்கியுள்ளது. மாலை வேளையில் கோயில் வளாகத்தில் (தெற்கு பிரகாரத்தில்) ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.
உற்சவம் தொடங்கியதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாருடன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நவம்பா் 4- ஆம் தேதி ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தன்று ஊஞ்சல் உத்ஸவம் நிறைவடையும்.