ஆன்மிகம்

பராசக்தி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே பராசக்தி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு நடந்தது

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பாலக்குறிச்சி, குமாரமங்கலத்தில் பராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடிமாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT