சென்னை,
சந்திரகிரணம் நாளை மார்ச்.3 (செவ்வாய் கிழமை) நிகழ உள்ளது. பொதுவாக சந்திரகிரகணம், சூரியகிரகணம் இயற்கையான நிகழ்வுகள் என்றாலும் இந்துக்கள் கிரகணத்தின் போது கோவில்களுக்கு செல்வதை தவிர்க்கின்றனர். நாளை சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோவில்கள் நடை அடைக்கபடுகின்றன.
கோவில் என்பது வெறும் சிலைகள், மண்டபங்கள் மட்டும் நிரம்பியுள்ள இடங்கள் மட்டும் அல்ல, முழுக்க முழுக்க நேர்மறை ஆற்றல் நிறைந்த இடம். இதனால் பொதுமக்கள் மன அமைதிக்காவும், தங்கள் குறைகளை கூறவும் வருகின்றனர். கிரகண நாட்களின்போது ஈர்ப்பு சக்தி காரணமாக எதிர்மறை ஆற்றல் அதிகமாக வெளிப்படும். அந்த தாக்கம் கோவிலையும்,பக்தர்களையும் எந்தவிதத்திலும் தாக்ககூடாது என்ற நம்பிக்கையில் கோவில் நடை அடைக்கப்படுகிறது.
கிரகணம் முடிந்த கையோடு, அனைத்து கோவில்களிலும் சுத்தமாக கழுவி விட்ட பிறகுதான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இது வழக்கமான நடவடிக்கை அகும். அதை போல் மூலவர் சிலைக்கு வீரியம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக துளசி மாலைகள் கொண்டு அலங்காரம் செய்வர்.
துளசி இலை எதிர்மறை ஆற்றலை எடுத்துக்கொள்ளும் நன்மையை கொண்டது. மேலும், சந்திரகிரகணத்தின் போது கெட்ட கதிர்வீச்சுகள் வெளிவரும், அதையும் துளசி உறிஞ்சும் தன்மை கொண்டது. கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு உணவு உண்ணவேண்டும் என்று சொல்லப்படுகிறது.