தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, மெலட்டூர ஏர்வாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 29-ம் காலையில் சக்தி பூஜையுடன் தீமிதி திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினசரி இரவு அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தீமிதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.