சோழவந்தான் தெற்குரத வீதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் மாசி மாத களரி உற்சவ திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்தனர்.
நேற்று காலை பூ வளர்த்தனர். மாலையில் சிறப்பு பூஜைக்கு பிறகு, விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி (தீமிதித்தல்) நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று சக்தி கரகம் கரைத்தல், நாளை பல்லையம் பிரித்தல் நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை சோழவந்தான், கவுண்டம்பட்டி, கொண்டையம்பட்டி கோவில் பங்காளிகள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.