தெப்ப உற்சவம் 
ஆன்மிகம்

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவத்தைத் தொடர்ந்து நாளை தவன உற்சவம் தொடங்குகிறது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டின் தெப்ப உற்சவம் கடந்த 1-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி, இன்றுடன் தெப்ப உற்சவம் நிறைவடைகிறது. நாளை தவன உற்சவம் தொடங்குகிறது. மூன்று நாட்கள் இந்த உற்சவம் நடைபெறும். பின்னர் 9ம் தேதி திங்கட்கிழமை தாயார் தவன உற்சமும், 10-ம் தேதி ஆண்டாள் தவன உற்சவமும் நடைபெறுகின்றன.