தேரோட்டம் 
ஆன்மிகம்

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம்

திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

வதான்யேஸ்வரர் கோவில்தரங்கம்பாடி,

மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றுவரும் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

காவிரி துலா உற்சவம்

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க காவிரி துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவ்வகையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய மாயூரநாத சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டின் காவிரி துலா உற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமி பஞ்ச மூர்த்திகள் விசேஷ அலங்காரத்தில் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளினர். திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

நமசிவாய முழக்கம்

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘நமசிவாய’ முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்தனர். தேர்கள் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தன. பக்தர்கள் வழிநெடுகிலும் வரவேற்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

வதான்யேஸ்வரர் கோவில்

இதேபோல் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய‌ ஸ்ரீ வதான்யேஸ்வர சுவாமி திருக்கோவிலில் கடந்த 7ம் தேதி முதல் ஐப்பசி காவிரி துலா உற்சவம் நடைபெற்று வருகின்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாள் விசேஷ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளியதும், கோவிலின் கட்டளை தம்பிரான் விசாரணை சிவகுருநாதன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

SCROLL FOR NEXT