தேரோட்டம் 
ஆன்மிகம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, 'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்தனர்.

சென்னை,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றுத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை 5 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜையைத் தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, 'கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேரோட்டம்

தெற்கு மாட வீதி, துளசிங்க பெருமாள் கோவில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு என கோவிலைச் சுற்றிய 4 தெருக்களிலும் திருத்தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோடும் வீதியின் இருபுறமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.