பக்தர்கள்  
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கல்யாணம்: மொய் பணம் செலுத்தி பிரசாதம் வாங்கிச் சென்ற பக்தர்கள்

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (நவம்பர் 16) முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறஇருக்கிறது.

திருக்கல்யாணம்

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நடைபெறும் இந்த திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

மொய் செலுத்தி பிரசாதம் பெற்ற பக்தர்கள்

திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவிலில் மொய் பணம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் மொய் பணம் செலுத்தினர். மொய் பணம் செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சென்றனர்.

கோவிலில் குவிந்த பக்தர்கள்

முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது.

SCROLL FOR NEXT