சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் 
ஆன்மிகம்

பரமத்தி வேலூர்: முருகன் கோவில்களில் திருக்கார்த்திகை வழிபாடு

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்,

திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

18 வகை திரவியங்களால் அபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு, திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், பாலமுருகன் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை

அதேபோல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமி,

கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், அய்யம்பாளையம் ராஜா வாய்க்கால் அருகே உள்ள முருகப்பெருமான், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகப் பெருமான் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT