திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே கன்னங்குடி கிராமத்தில் தான்தோன்றி வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடந்தது.
குடமுழுக்கை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, இன்று காலையில் நிறைவுபெற்றன. இதைத்தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, தமிழ் வேள்வி முறைப்படி மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.