திருவையாறு,
திருவையாறு மேலவீதியில் பராசக்தி ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பராசக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பராசக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனையைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு ராஜ வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது.