குழந்தையை சுமந்தபடி தீமித்த பக்தர் 
ஆன்மிகம்

திருவள்ளூர்: மந்தவெளி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தவெளி மாரியம்மன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அக்னி குண்டம்

அதன்பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் அலகு குத்தியபடியும், சிலர் குழந்தைகளை சுமந்தபடியும் தீமிதித்தனர்.

பின்னர் ஸ்ரீ மந்தவெளி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.