ஆன்மிகம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கொடியேற்றம் நடந்தது.

திருவாரூர்,

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 29-ந்தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கொடியேற்றம் நடந்தது. 54 அடி உயர கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த உற்சவக் கொடி மங்கள இசையுடன் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.