ஆன்மிகம்

திசையன்விளை சந்தனபதி அய்யா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சுவாமி தோப்பு தலைமைப்பதி பூஜித குரு பொன்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ள புகழ் பெற்ற சந்தனபதி அய்யா கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை நடைபெற்ற சிறப்பு பணிவிடைகளை தொடர்ந்து, திருச்சங்கு முழங்க பிச்சிப்பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவிக்கொடி கோவிலைச் சுற்றி வலம் வந்தது.

பின்னர் பக்தர்கள் கட்டியம் கூற சுவாமி தோப்பு தலைமைப்பதி பூஜித குரு பொன்ராஜ் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மூன்று வேளையும் அன்னதர்மம் மற்றும் மாலை நேரங்களில் வாகன வீதி உலா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.