தூத்துக்குடி.
தூத்துக்குடி சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திசையன்விளை பங்குத்தந்தை அந்தோணி டக்ளஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பூச்சிக்காடு பங்குத்தந்தை ஜார்ஜ் ஆலிபன் மறையுரை நிகழ்த்தினார்.
தாளமுத்துநகர் பங்குத்தந்தை செல்வரத்தினம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
9-ம் திருநாளான டிசம்பர் 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 3-ந் தேதி 10-ம் திருநாளன்று அன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. காலை 9 மணிக்கு புனிதரின் சப்பர பவனி நடைபெற உள்ளது.