திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்றைய தரிசன நிலவலம் மற்றும் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்ட தகவல் வருமாறு:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று (29.07.2026) 74 ஆயிரத்து 471 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 319 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 கோடியே 68 லட்சம் கிடைத்துள்ளது.
நேற்று 4 லட்சத்து 9 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 59 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். 2 ஆயிரத்து 946 பக்தர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். பக்தர்களின் காத்திருப்பு வரிசையானது சிலாதோரணம் வெளியே வரை நீண்டிருந்தது.
டைம் ஸ்லாட் டோக்கன்கள் இல்லாமல் சென்ற பக்தர்கள் இலவச தரிசனத்துக்கு சுமார் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது.
இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.