காணிக்கை எண்ணும் பணி 
ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவிலில் 24 நாட்களில் ரூ.1.37 கோடி உண்டியல் காணிக்கை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது.

திருவள்ளூர்,

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகளை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.

ரூ.1.37 கோடி வசூல்

இந்நிலையில், திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதன்படி, கடந்த 24 நாட்களில் ரூ. 1 கோடியே 37 லட்சம் ரொக்கம், 419 கிராம் தங்கம், 5450 கிராம் வெள்ளி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT