தீ மிதித்த பக்தர் 
ஆன்மிகம்

திருவள்ளூர்: அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன்- பொன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பெரியபாளையம்,

அழிஞ்சிவாக்கம் முத்தாலம்மன்- பொன்னியம்மன் கோவிலில் 29-ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தீமிதித்த பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் 29-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 7ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள், திருக்கோவிலின் எதிரே அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதன் பின்னர், உற்சவர் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று திருக்கோவில் வளாகத்தில் அம்மனுக்கு மாபெரும் படையல் போடும் நிகழ்ச்சியும், விடையாற்றி உற்சவமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அழிஞ்சிவாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்னை தரிசனம் செய்தனர்.