திருப்பதி ஏழுமலையான் கோவில் 
ஆன்மிகம்

செப்டம்பர் மாதம் திருப்பதி போறீங்களா..? இந்த மாற்றத்தை கவனித்து பயணத்தை திட்டமிடுங்கள்

செப்டம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி,

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாக் காலத்தில் ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதன் விவரம்:

• அஷ்டதள பாத பத்மாராதன சேவை

• திருப்பாவாடை சேவை

• ஆர்ஜித கல்யாணோற்சவம்

• ஊஞ்சல் சேவை

• சஹஸ்ர தீபாலங்கார சேவை

சிறப்பு தரிசனங்கள் ரத்து

மேலும், பிரம்மோற்சவ காலத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.